டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் உதவி!

#SriLanka #LANKA4 #Disaster #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Loan
Lakhi
2 hours ago
டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் உதவி!

MSME துறையை மீள ஆரம்பிக்க 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி அண்மைய டிட்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்காக இரண்டு சிறப்பு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘மீள ஆரம்பிப்பதற்கான கடன் திட்டம்’ மற்றும் ‘மீளமைத்தலுக்கான கடன் திட்டம்’ ஆகியவற்றின் கீழ், 15 பங்காளி நிதி நிறுவனங்களின் ஊடாக 3,968 தொழில்முயற்சியாளர்களுக்கு ரூ.8,061.4 மில்லியன் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுக்காக 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் ரூ.10,000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரழிவால் பாதிக்கப்பட்ட தொழில்களை விரைவாக மீட்டெடுத்து, நாட்டின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4