விரிவுரையாளர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி நாளை பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்!
நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்களின் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், 2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு முன்னர், தற்போது உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பாதுகாப்பது முக்கியம் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்க அரசாங்கத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும், தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரலாம் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே