சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், அராம்கோ எண்ணெய் தளங்கள் மீது ஹூதி தாக்குதல் - 73 பேர் காயம்
சவூதி அரேபியாவின் பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத் தளங்கள் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளனர்.
வளைகுடா ராஜ்ஜியத்தின் எரிசக்தி அமைச்சகம், அதன் தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ள பல எரிசக்தி வசதிகள் மற்றும் ஆலைகள் ஹூதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதற்காக, சவூதி ஆதரவு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், யேமனில் சண்டை தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், யேமனின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளையும், வடக்குப் பகுதியின் பெரும்பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதிகள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள், தங்களின் பொது எல்லையருகே உள்ள அப்ஹா மற்றும் ஜிசானில் அமைந்துள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையம், கிங் காலித் விமானப்படைத் தளம் மற்றும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.d
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே