ஹட்டன் – குருவத்தை தோட்ட வீதி சீரமைக்கப்படுமா? 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி!

#SriLanka #Road #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 week ago
ஹட்டன் – குருவத்தை தோட்ட வீதி சீரமைக்கப்படுமா? 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி!

ஹட்டன்–றொசல்ல, குருவத்தை தோட்டப் பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல தசாப்தங்களாக முறையான போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, வீதியின் சில பகுதிகளில் தற்போது சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், பிரதானமான 6 கிலோமீட்டர் வீதி முழுமையாக சீரமைக்கப்படாமல் அரைகுறையாக கைவிடப்படும் நிலை ஏற்படுமோ என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கும், அன்றாட தேவைகளுக்காக அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்வதற்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் மக்கள் இன்னும் ஆபத்தான பாதைகளை பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

அவசர மருத்துவத் தேவைகளின்போது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், 6 கிலோமீட்டர் வீதியையும் முழுமையாக புனரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!