நெல் உற்பத்திக்கு அரசாங்கத்தின் புதிய திட்டம் – 8 இலட்சம் ஹெக்டேர் இலக்கு!

#SriLanka #LANKA4 #Paddy #Production #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 week ago
நெல் உற்பத்திக்கு அரசாங்கத்தின் புதிய திட்டம் – 8 இலட்சம் ஹெக்டேர் இலக்கு!

2026/27 பெரும்போகத்தில் நாட்டில் 8 இலட்சம் ஹெக்டேரில் நெல் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீர் வளத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில், பிரதேசங்களுக்கு ஏற்ப பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. 

அதன்படி, வளவை மண்டலத்தில் ஒக்டோபர் 1ஆம் திகதியும், எல மண்டலத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதியும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கவுடுல்ல மண்டலத்தில் நவம்பர் 1ஆம் திகதியும், எலஹெர மண்டலத்தில் நவம்பர் 10ஆம் திகதியும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் ஏப்ரல் வரையில் குறைந்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், நீர் வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக உரிய காலத்தில் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வேண்டுமென நீர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களை கருத்திற்கொண்டு விவசாயிகள் முன்கூட்டியே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களமும் அறிவுறுத்தியுள்ளது.

வரவிருக்கும் பெரும்போகத்திற்கு தேவையான உரம் மற்றும் விதை நெல் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப பரிந்துரைகளுக்கு அமைய உரிய நேரத்தில் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறு விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த விவசாயிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதிகள் தொடர்பான முன்மொழிவுகளுக்கான இறுதி தீர்மானம் செப்டம்பர் 18ஆம் திகதி கன்னோருவையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!