மலையக மக்களை ஏமாற்றாதீர்! 6,000 வீடுகள் எங்கே? – மனோ கணேசன் கேள்வி

#SriLanka #Country #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 week ago
மலையக மக்களை ஏமாற்றாதீர்! 6,000 வீடுகள் எங்கே? – மனோ கணேசன் கேள்வி

மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி வழங்கும் வேலைத்திட்டத்தை தமது அரசாங்கமே ஆரம்பித்ததாகவும், பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் 10 பேர்ச்சஸ் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் வேலைச்சுமையும் அதிகரித்துள்ளதாகவும், இதனை தொழிலாளர்களிடம் நேரடியாகக் கேட்டறிய முடியும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், 6,000 வீடுகள் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், இதுவரை 58 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்காமல் உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!