இலங்கை சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட கேரள நபரின் உடல் காவல்துறை பாதுகாப்பில் அடக்கம்

#SriLanka #Death #Prison #Negombo #LANKA4 #Kerala #Fight #L4
Prasu
1 week ago
இலங்கை சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட கேரள நபரின் உடல் காவல்துறை பாதுகாப்பில் அடக்கம்

இலங்கையின் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த வன்முறை கலவரத்தின்போது கொல்லப்பட்ட இந்தியர் ஒருவர், சிறப்பு காவல்துறை பாதுகாப்போடு அடக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

73 வயதான அந்தச் சிறைவாசியின் உடல் செப்டம்பர் 2ம் திகதி நீதிமன்ற உத்தரவின்படியும், அரசு செலவிலும் அடக்கம் செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்த அடக்கச் சடங்கில் பங்கேற்றனர்.

ஊடகச் செய்திகளின்படி, உயிரிழந்தவர் உன்னிகிருஷ்ணன் எஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்; இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

மார்ச் 2ம் திகதி இலங்கை வந்த அவர், கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறைவாசிகளிடையே வெடித்த வன்முறையின்போது கொல்லப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!