மொரட்டுவயில் துப்பாக்கிச்சூடு சம்பவம் - தாக்குதல்தாரி தப்பியோட்டம்
#SriLanka
#Colombo
#Police
#Investigation
#Crime
#GunShoot
Thamilini
13 hours ago
மொரட்டுவை, ரவத்தவத்தை பகுதியிலுள்ள இம்மானுவேல் மாவத்தையில் நேற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் எவ்விதப் பாதிப்புமின்றி தப்பியதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மொரட்டுவை மாநகர சபையில் பணிபுரியும் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே