இரண்டு வீடுகள் 14 நாட்களுக்கு முடக்கம் – சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை தீவிரம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சந்தேகநபரான ஷிரான் பாசிக்கின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படும் நளின் அர்ஜுனவுக்கு சொந்தமானதாக குறிப்பிடப்படும் இரண்டு வீடுகள், 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு வீடுகளும் கடவத்தை மற்றும் களனி பகுதிகளில் அமைந்துள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, குறித்த சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவையா என்பதைக் கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இரண்டு வீடுகளும் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், விசாரணைகளின் போது கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குறித்த சொத்துக்கள் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே