சுவிட்சர்லாந்தில் உள்ள நீர் மின் நிலையம் ஒன்றில் வெடி விபத்து

#SWITZERLAND #Hospital #LANKA4 #Blast #Power_Plant #L4
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் உள்ள நீர் மின் நிலையம் ஒன்றில் வெடி விபத்து

சுவிட்சர்லாந்தில் உள்ள நீர்மின் நிலையம் ஒன்றில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து பியோட்டா கிராமத்தில் நிகழ்ந்ததாக டிசினோ மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும், வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4