ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் 6 திரை பிரபலங்கள்

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Birthday #Singer #L4
Prasu
2 hours ago
ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் 6 திரை பிரபலங்கள்

திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள பல பிரபலங்கள் இன்று செப்டம்பர் 10ம் திகதி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில்;

அபர்ணா தாஸ் - வயது 31

  • 1995ம் ஆண்டு பிறந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் பெற்று வருபவர் நடிகை அபர்ணா தாஸ்.
  • ‘நான் பிரகாஷன்’ படத்தின் மூலம் மலையாளத்திலும், ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமான இவர், ‘டாடா’ திரைப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அனுராக் காஷ்யப் - வயது 54

  • 1972ம் ஆண்டு பிறந்து பாலிவுட்டில் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகராக திகழ்பவர் அனுராக் காஷ்யப்.
  • ‘சத்யா’ படத்தின் மூலம் எழுத்தாளராக முக்கிய கவனம் பெற்ற இவர், ‘கேங்ஸ் ஆஃப் வாசேபூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘இமைக்கா நொடிகள் ’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார்.

அதுல் குல்கர்னி - வயது 61

  • 1965ம் ஆண்டு பிறந்து இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார் அதுல் குல்கர்னி.
  • ‘ஹே ராம்’, ‘சாந்தினி பார்’, ‘ரங் தே பசந்தி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

சின்மயி - வயது 42

  • 1984ம் ஆண்டு பிறந்த பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி ஸ்ரீபாதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
  • இவர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

ரவி மோகன் - வயது 46

  • 1980ம் ஆண்டு பிறந்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ரவி மோகன்.
  • ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மஞ்சு வாரியர் - வயது 48

  • 1978ம் ஆண்டு பிறந்து மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் மஞ்சு வாரியர்.
  • ‘சல்லாபம்’, ‘ஆறாம் தம்புரான்’, ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். 
  • தமிழ் திரையுலகில் ‘அசுரன்’, ‘துணிவு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4