18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்தார் புடின்
#Delhi
#world_news
#LANKA4
#Putin
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
6 hours ago
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தியாவின் புதுடெல்லியை வந்தடைந்தார்.
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி புடினை, இந்திய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.
உலகின் முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய BRICS அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி புடினின் இந்திய விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்த விஜயத்தின்போது BRICS அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே