100 ஆண்டு கால பிரகடனத்தில் கையெழுத்திட்ட கனடா மற்றும் உக்ரைன்

#CANADA #government #Ukraine #LANKA4 #Agreement #L4
Prasu
5 hours ago
100 ஆண்டு கால பிரகடனத்தில் கையெழுத்திட்ட கனடா மற்றும் உக்ரைன்

கனடா பிரதமர் மார்க் கார்னியும், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் 100 ஆண்டு கால கூட்டாண்மைக்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

கையெழுத்திடும் விழாவிற்குப் பிறகு கால்கரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்னி, இந்த ஒப்பந்தம் உக்ரைனில் நடக்கும் போருக்கு அப்பாற்பட்டு நீண்டகால ஒத்துழைப்பை நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

"வரும் மாதங்களில் இரு நாடுகளும் "பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புனரமைப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒரு நீண்டகால கட்டமைப்பை முறைப்படுத்தும்" என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஆயுதப்படைகள் தற்போது சுமார் 2,000 ட்ரோன்களைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், "வரும் ஆண்டுகளில், நமக்கு மில்லியன் கணக்கில் தேவைப்படும்" என்றார். 

மேலும், கனடிய ஆயுதப்படைகள் மற்றும் கனடிய கடலோரக் காவல்படைக்காக உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் பாதுகாப்பு ட்ரோன் முன்முயற்சியைத் தொடங்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4