திவுலபிட்டியவில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
#SriLanka
#Police
#Murder
#Investigation
#Body
#LANKA4
#L4
Prasu
20 hours ago
திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடகம்மன பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர் திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்ததையடுத்து, பொலிஸார் அந்தச் சடலத்தை மீட்டனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தின் தலை உடல் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
மேலும், அப்பகுதியில் சில பணத்தாள்களும் ஒரு வகை மிட்டாயும் சிதறிக் கிடந்ததையும் அவர்கள் அவதானித்தனர்.
இச்சம்பவம் குறித்து திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே