அனுராவின் அடுத்த வெற்றி இது.
#SriLanka
#LANKA4
#President
#Victory
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பகுதியில் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளை சிலர் அரசியல் பழிவாங்கல் என சித்தரிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த காலங்களிலேயே உண்மையான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே