கிளிநொச்சி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டல்

#SriLanka #Kilinochchi #LANKA4 #credit #Office #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
கிளிநொச்சி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கான புதிய அலுவலகக் கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி A9 பிரதான வீதியில், மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்குச் சொந்தமான காணியில் குறித்த புதிய அலுவலகக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

சமாசத்தின் தலைவர் சு. கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் புஸ்பராணி புவனேஸ்வரன், சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாச பொதுமுகாமையாளர் செ. யோகரத்தினம், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகக் கட்டிடம் அமைக்கப்படுவதன் மூலம் சமாசத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அங்கத்தவர்களுக்கான சேவைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4