இடி மற்றும் பலத்த மின்னல் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

#SriLanka #weather #Warning #lightning #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 hours ago
இடி மற்றும் பலத்த மின்னல் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 இந்த எச்சரிக்கை இன்று (15) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டு, இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். 

 அதன்படி, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இப்பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேலும், இடியுடன் கூடிய மழையின் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!