எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்

#SriLanka #Fuel #LANKA4 #President #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் விலையில் விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி, RM Park, Sinopec மற்றும் LIOC ஆகிய தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகித்து வருவதால், பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களே அதிகளவில் இயங்கி வருவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதாகக் கூறி சர்வதேச எரிபொருள் நிறுவனங்கள் இலங்கைக்குள் வந்ததாகவும், சந்தைப் போட்டி விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 ஆனால், இலங்கையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர் அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிப்பதாகவும் ராஜபக்ஷ கூறினார்.

மேலும், தாங்கள் நிர்ணயிக்கும் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நேரிட்டால் ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையால் பொதுமக்கள் மட்டுமன்றி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் குமார ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!