விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ
#SriLanka
#Investigation
#Travel
#LANKA4
#Singapore
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வெளிநாடு சென்றுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஷிராந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் அத்தையும் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இன்று அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான SQ-469 விமானம் மூலம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.