கிளிநொச்சி கரைச்சியில் 659 வீட்டுத்திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல்

#SriLanka #Kilinochchi #LANKA4 #discussion #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கிளிநொச்சி கரைச்சியில் 659 வீட்டுத்திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் இன்று (19) நடைபெற்றது.

சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுத்திட்டத்திற்காக கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 659 பயனாளிகளுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் தவசெல்வன் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 2,438 பயனாளிகள் முதற்கட்டமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 659 பயனாளிகளுடன் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!