சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: சாணக்கியன் அவசர கோரிக்கை

#SriLanka #Death #LANKA4 #SaudiArabia #sanakkiyan #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: சாணக்கியன் அவசர கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கும், தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து, குறித்த இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!