ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் நள்ளிரவுடன் நிறைவு

#SriLanka #strike #Railway #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 hours ago
ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் நள்ளிரவுடன் நிறைவு

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தால் (SLRSMA) முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. 

இலங்கை ரயில்வேயின் பொது மேலாளரை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இப்போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, பொதுமக்களுக்குத் தேவையற்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான இடையூறுமிக்க தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் சில தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களைப் போலன்றி, இம்முறை பயணிகள் எவ்விதக் கடுமையான சிரமத்திற்கும் உள்ளாகாத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!