நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

#SriLanka #weather #Rain #Meteorology #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 hours ago
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

 சபரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

 இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!