மாவட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம்

#SriLanka #Meeting #District #LANKA4 #Security #Commitee #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
மாவட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம்

கேகாலை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் எதிர்காலத் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பொலிஸ், இராணுவம் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், கேகாலை, மாவனெல்ல மற்றும் வரக்காபொல நகரங்களைச் சுற்றியுள்ள போக்குவரத்து முகாமைத்துவம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!