சஹ்ரானுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை - ரிசாத் பதியுதீன் உறுதி
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தமக்கு எதிராக முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாக ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில்,சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவரை நேரில் சந்தித்ததோ பேசியதோ இல்லை என்றும் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நேர்மையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.