வடமாகாணத்தில் மின்தடை – ஒக்டோபர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மின் விநியோகம் துண்டிப்பு!

#SriLanka #NorthernProvince #LANKA4 #power cuts #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Electricity
Riya
2 hours ago
வடமாகாணத்தில் மின்தடை – ஒக்டோபர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மின் விநியோகம் துண்டிப்பு!

வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் (Reconductoring) பணிகள் காரணமாக, வடமாகாணத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் ஒக்டோபர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், ஒக்டோபர் 3ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக யாழ். குடாநாடு முழுவதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிகள் நிறைவடைந்தவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மின்தடையைக் கருத்திற்கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!