பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்ல முயன்ற இரண்டு அகதிகள் மரணம்

#Death #FRANCE #LANKA4 #Refugee #ENGLAND #Boat #illegal #L4
Prasu
1 hour ago
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்ல முயன்ற இரண்டு அகதிகள் மரணம்

பிரான்ஸிலிருந்து இங்கிலாந்திற்குச் சட்டவிரோதமாகச் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற இரண்டு அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் கடற்கரை நகரமான கலே பகுதியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ரப்பர் படகு, கடலின் நடுவே சென்றபோது சீரற்ற வானிலை மற்றும் படகில் ஆட்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் தடுமாறியது.

இதில் படகில் இருந்த அகதி ஒருவர் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுப் படகிலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து பிரெஞ்சு கடலோரக் காவல் படையினர் விரைந்து சென்று படகில் இருந்த ஏனைய அகதிகளை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதற்கு முதல் நாள் இதேபோன்று மற்றொரு சிறிய படகில் ஆபத்தான முறையில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது, மற்றொரு அகதி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!