முதல் நாளில் உலகளவில் 88 கோடி வசூல் செய்துள்ள பாரடைஸ் திரைப்படம்

#TamilCinema #LANKA4 #Collection #release #Movie #L4
Prasu
1 hour ago
முதல் நாளில் உலகளவில் 88 கோடி வசூல் செய்துள்ள பாரடைஸ் திரைப்படம்

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது.

இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதன்படி, இந்தபடம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.88 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்ந்து வசூல் சாதனையை இந்த படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!