கனடாவின் சர்வதேச விமான நிலையத்தில் ஹஷீஷ் மற்றும் கோகைன் போதைப்பொருளுடன் பயணி ஒருவர் கைது
#ARREST
#CANADA
#Airport
#drugs
#LANKA4
#Smuggling
#L4
Prasu
2 hours ago
கனடாவின் ரொறன்டோ பீயர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் பயணப் பைகளில் இருந்து 44 கிலோகிராம் ஹஷீஷ் மற்றும் 13 கிலோகிராம் கோகைன் போதைப்பொருட்களை கனடா எல்லை சேவைகள் முகவரகம் பறிமுதல் செய்துள்ளது.
இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயணி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் கனடிய அரச உயர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் அடையாளம் குறித்த விபரங்களை கனடிய அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.