பிரான்சில் கருணை கொலை தொடர்பான சட்டங்கள் குறித்து போப் லியோ கவலை

#FRANCE #Law #LANKA4 #Euthanasia #Pope #L4
Prasu
3 hours ago
பிரான்சில் கருணை கொலை தொடர்பான சட்டங்கள் குறித்து போப் லியோ கவலை

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'உதவி பெறும் மரணம்' (assisted dying) அல்லது கருணை மரணம் தொடர்பான சட்டப்பூர்வ உரிமையை பிரான்ஸ் பல ஆண்டுகால தீவிர விவாதங்களுக்குப் பிறகு அண்மையில் உருவாக்கியிருந்தது.

இந்நிலையில், பிரான்ஸில் ஆற்றிய உரையில், கத்தோலிக்க திருச்சபையின் இதுகுறித்த எதிர்ப்பை போப் லியோ உறுதியாக வெளிப்படுத்தினார்.

உள்ளூர் கத்தோலிக்க ஆயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பைப் பெற்ற பிரான்ஸின் புதிய சட்டத்தை போப் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், லாப நோக்கத்திற்காக ஊக்குவிக்கப்படக்கூடிய மரபணு மாற்றம் மற்றும் வாடகைத் தாய் முறை (surrogacy) ஆகியவற்றுடன் சேர்த்து, உதவி பெறும் மரண முறையையும் அவர் விமர்சித்தார்.

"வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே மற்ற அனைத்து மனித உரிமைகளுக்கும் இன்றியமையாத அடித்தளமாக அமைகிறது என்பதை நான் உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று எலிசீ (Elysee) மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிற அரசியல்வாதிகள் முன்னிலையில் ஆற்றிய உரையில் போப் குறிப்பிட்டுள்ளார்.

"அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை லாபம் ஈட்டும் முயற்சிகளாக மாற்றி, மரபணு மாற்றம், வாடகைத் தாய் முறை, மனித உறுப்பு வர்த்தகம் அல்லது ஒருவரின் மரணத்தை அவரே தீர்மானிக்கும் வாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் சமூகப் போக்குகள் குறித்து நான் அவ்வப்போது கவலை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!