இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை உயர்த்த கனடா திட்டம்

#India #CANADA #government #LANKA4 #economy #L4
Prasu
1 hour ago
இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை உயர்த்த கனடா திட்டம்

கனடவின் வணிக அமைச்சர் மணீந்தர் சித்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

தற்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 30 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மில்வாக்கியில் நடைபெற்ற G20 வணிக அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, “இந்தியா-கனடா தலைவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு 70 பில்லியன் டாலர். இதை அடைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (CEPA) முக்கிய பங்கு வகிக்கும்” என மணீந்தர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா, இந்தியாவில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ள மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது.

விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற அடிக்கட்டு திட்டங்களில் கனேடிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதேசமயம், இந்திய முதலீட்டாளர்களும் கனடாவின் சுரங்க மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய வரவேற்கப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!