பிரான்ஸ் மாணவர் போராட்டம் - 6,100க்கும் மேற்பட்டோர் கைது
#ARREST
#Student
#FRANCE
#Protest
#LANKA4
#L4
Prasu
1 hour ago
பிரான்ஸ் முழுவதும் பாடசாலைகளில் சிறந்த கல்வி வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் பாடசாலைக் கட்டிடங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களின் போது சில இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
இதுவரை இந்தப் போராட்டத்தில் 215க்கும் மேற்பட்ட மாணவர்களும், 700க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை 6,100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.