ஈரானுக்கு எதிராக கூட்டு சேர்ந்த கனடா உட்பட 29 நாடுகள்

#CANADA #Attack #Country #LANKA4 #Iran #World #L4
Prasu
16 hours ago
ஈரானுக்கு எதிராக கூட்டு சேர்ந்த கனடா உட்பட 29 நாடுகள்

வெளிநாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதல்கள், சதித்திட்டங்கள், மற்றும் இணையவழித் தாக்குதல்களுக்கு கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 29 நாடுகள் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் ரகசிய வலையமைப்புகள் மீது சர்வதேச அளவில் விசாரணையும் நடவடிக்கைகளும் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் ஃபேர்போர்ட் விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் 27 அன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் பதிவான பல தாக்குதல்களின் பின்னணியில் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் நோக்கங்களை அடைவதற்காக வெளிநாடுகளில் வன்முறையைப் பயன்படுத்துவது, படுகொலை சதிகளில் ஈடுபடுவது மற்றும் அரசு நிறுவனங்களை குறிவைத்து இணையவழித் தாக்குதல்களைத் தொடுப்பது போன்றவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!