புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் பாடசாலை மாணவர்கள்
#Student
#FRANCE
#Protest
#government
#LANKA4
#L4
Prasu
16 hours ago
பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் இன்று முதல் புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்போது மாணவர்களின் போராட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆகவே புதிய போராட்டங்கள் இந்த மாணவர் இயக்கத்திற்கு ஒரு உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக அக்டோபர் 24 அன்று போராட்டங்களை நடத்த இணையவழிச் செயல்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மாணவர்களின் போராட்டங்கள் நிறைவடைவதை அதிகாரிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
இருப்பினும் அந்த போராட்டங்களுடன் இணைந்து மாணவர்களின் புதிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.