தனித்துவமான பச்சைகளை குத்தி உலக சாதனை படைத்த கனேடியர்
#CANADA
#LANKA4
#WorldRecord
#Tattoo
#L4
Prasu
2 hours ago
கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் டாட்டூக்கள் போட்டுக்கொண்டதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கனடாவின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 38 வயது நபர் ஜெர்மி 'ரெமி' ஸ்கோஃபீல்ட். இவர் தனது உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் டாட்டூக்கள் போட்டுக்கொண்டார்.
முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதும் மைகளால் மூடிக்கொண்ட ஜெர்மி, 2005ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக இதனை செய்து வந்துள்ளார்.
ஜெர்மியின் உடலின் சில பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட முறைகள் கூட டாட்டூக்கள் குத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் உலகில் அதிக அடுக்கு டாட்டூக்கள் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை பட்டத்தை ஜெர்மி வென்றார்.