விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும் பாரிஸ் - ட்ரம்ப் சர்ச்சை கருத்து

#Student #FRANCE #Protest #America #Muslim #LANKA4 #Paris #L4 #DonaldTrump
Prasu
2 weeks ago
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும் பாரிஸ் - ட்ரம்ப் சர்ச்சை கருத்து

பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ் மிக விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தொடர்பாக இளம் தலைமுறையினர் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், அந்நாட்டு அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக மக்களும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு கூறும்நிலையில், 8 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரான்ஸில் குடியேறியவர்களே அந்நாட்டைக் கைப்பற்றிவிட்டனர், அந்நாட்டின் எல்லைகளை அரசு விரைவாக மூட வேண்டும் என பிரான்ஸ் வன்முறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகில் உள்ள அனைவரையும் உங்கள் நாட்டுக்குள் நீங்கள் அனுமதிக்கிறீர்கள். பாரீஸ், ஒரு முஸ்லிம் நகரமாக மிக விரைவில் மாறப் போகிறது. 

பிரான்ஸில் மிகப் பெரிய தவறைச் செய்வதாகவும், உலகில் உள்ள அனைவரும் உள்ளே வருவதற்கு அவர்கள் அனுமதிப்பதாகவும் நீண்ட காலத்துக்கு முன்பே மேக்ரானிடம் நான் கூறினேன் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!