அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உயிரிழப்பு

#SriLanka #Death #Anuradapura #LANKA4 #Climate #HeavyRain #Strom #L4
Prasu
1 hour ago
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உயிரிழப்பு

இலங்கையின் அனுராதபுரம், மெதவச்சிய, ரம்பேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூவரும் மழை பெய்ததால் அங்கிருந்த மரமொன்றின் அருகில் ஒதுங்கியுள்ளனர். இதன்போது அந்த இடத்தில் மின்னல் தாக்கியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் ரம்பேவ பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்களில் ஒருவர் 61 வயதுடைய ஏ. ஹேமமாலினி எனவும் 26 வயதுடைய டி.எம். துஷாரிகா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஜே. ரஞ்சனி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!