பிரான்ஸ் மாணவர் போராட்டம் - காவல்துறையினருக்கு உதவியாக களமிறங்கும் ராணுவத்தினர்

#Police #FRANCE #Protest #LANKA4 #Military #L4
Prasu
2 hours ago
பிரான்ஸ் மாணவர் போராட்டம் - காவல்துறையினருக்கு உதவியாக களமிறங்கும் ராணுவத்தினர்

பிரான்சில் நடைபெறவுள்ள புதிய கட்டப் போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். கடந்த வார இறுதியில் நிகழ்ந்த கலவரங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கும் வன்முறையால் அச்சமடைந்துள்ள சந்தைகளுக்கு நம்பிக்கையளிப்பதற்கும் காவல்துறையினருக்கு உதவியாக ராணுவத்தினரை களமிறக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த சனிக்கிழமையை விட இந்த முறை 20 சதவீதம் கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாழ்க்கைச் செலவு உயர்விற்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட குழப்பங்களால், 3,000 கடைகள் சூறையாடப்பட்டன; 2,700 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்தது மட்டுமின்றி, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற அபாயகரமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு அதிரடிப்படையினரையும் தேவைப்பட்டால் களமிறக்கப்போவதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சக அதிகாரி லாரன்ட் நுனெஸ் தெரிவித்தார். 

முக்கியமான கட்டிடங்களைப் பாதுகாக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர். மேலும், ஹெலிகாப்டர்கள், நீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் 'சென்டார்' (Centaurs) என்று அழைக்கப்படும் கவச வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!