மழையுடன் கூடிய வானிலை - சாரதிகளுக்கு எச்சரிக்கை!
சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் வாகனங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறையின் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே. செனதீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கமைய மழைக்கு முன்னும் மழையின் போதும் ஈரமான சாலைகள், குறைந்த பார்வைத் திறன் மற்றும் இருண்ட வானம் ஆகியவை விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
“சமீபத்திய விபத்துகளில் கணிசமானவை மோட்டார் சைக்கிள்களை உள்ளடக்கியுள்ளன. பல சந்தர்ப்பங்களில், அதிக வேகத்தில் பயணிக்கும் ஓட்டுநர்கள் வழுக்கும் சாலைகளில் பிரேக் போடும்போது தங்கள் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் சில, பாதசாரிகள் மீதான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன,” என்று சுட்டிக்காட்டிய அவர், மழைக்காலத்தில் விரைவுச்சாலைகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.