யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையம் மீண்டும் திறப்பு.

#SriLanka #Jaffna #government #Bus #LANKA4 #Open
Abi
1 hour ago
யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையம் மீண்டும் திறப்பு.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27) காலை 8.30 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சேவைகளை ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக இணைந்த நேர அட்டவணையின் கீழ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பில் முன்னெடுக்கப்படும் இச்சேவையில், இதுவரை இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நான்காவது தடவையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தின் சேவைகள் இம்முறையாவது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து வசதியை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!