நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இலங்கையில் கைது செய்யப்பட்டதன் உண்மை நிலவரம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, அக்டோபர் 26ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளனர்.
2015ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப முயன்றதாக இந்தியாவில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய நீதிமன்றம் ஆரம்பத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் தண்டனை ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
இலங்கை திரும்பியவரை மீண்டும் கைது செய்திருப்பது தொடர்பாகச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.