மொனராகலையில் பேருந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்!

#SriLanka #Death #Police #Accident #Hospital #three-wheeler #Bus #LANKA4 #Injury #MONARAGALA
Abi
2 hours ago
மொனராகலையில் பேருந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயதுடைய சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், வெதிகும்புரவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!