மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு!
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கல்வி அமைச்சினூடாக 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்துக் கல்லூரி மைதானத்தில் வலைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கும், விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கும் குறித்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதுடன், கற்றல் சூழலுடன் இணைந்த விளையாட்டு வசதிகளை விருத்தி செய்யும் நோக்கிலும் இந்நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆராய்ந்துள்ளார்.