அநுராதபுரத்தில் இரு யானைகள் உயிரிழப்பு – சட்டவிரோதச் செயல் குறித்து விசாரணை!

#SriLanka #Death #Investigation #Elephant #Anuradapura #LANKA4
Abi
1 hour ago
அநுராதபுரத்தில் இரு யானைகள் உயிரிழப்பு – சட்டவிரோதச் செயல் குறித்து விசாரணை!

அநுராதபுரம், ரம்பேவ – அலுத்கம பகுதியில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் யானைகளுக்கு மின்சாரம் பாய்ச்சும் வகையில் மின்சாரக் கம்பி பொருத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலத்தின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (28) மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!