அஸ்வெசும திட்டத்தின் புதிய பட்டியல் - 991,800 பேர் உதவி பெற தகுதி பெற்றுள்ளனர்!

#SriLanka #government #LANKA4 #Aswesuma #Help
Thamilini
2 hours ago
அஸ்வெசும திட்டத்தின் புதிய பட்டியல் -  991,800 பேர் உதவி பெற தகுதி பெற்றுள்ளனர்!

'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் திருத்தப்பட்ட தெரிவுச் செயல்முறையின் கீழ், 1,391,830 பயனாளிகளை நீக்குவதற்கு நலன்புரி நன்மைகள் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிவரும் காலங்களில் 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியானது, 'மிகவும் வறியவர்  மற்றும் 'வறியவர்'  ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். 

இதற்கமைய பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் 991,800 பேர் உதவி பெற தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 363,142 பயனாளிகள் 'மிகவும் வறியவர்' பிரிவின் கீழ் வருகின்றனர்.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 17,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 

மேலும், 628,658 பயனாளிகள் 'வறியவர்' பிரிவின் கீழ் தகுதி பெற்றுள்ளனர்.  இவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

தற்போது தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பட்டியல், அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!