முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை கண்டறிய சர்வதேச உதவிகளை பெற நடவடிக்கை!
#SriLanka
#Fisherman
#Mullaitivu
#LANKA4
#Missing
Thamilini
1 hour ago
முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை தேடுவதற்கு சர்வதேச உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை இன்றும் (29.10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல்போனவர்களாவர்.
காணாமல்போன மீனவர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.