கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தேவைகள் குறித்து அமைச்சர் உபாலி பன்னிலகே நேரில் ஆராய்வு!

#SriLanka #School #Student #Kilinochchi #Minister #LANKA4 #education
Abi
2 hours ago
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் தேவைகள் குறித்து அமைச்சர் உபாலி பன்னிலகே நேரில் ஆராய்வு!

சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அண்மையில் விஜயம் செய்து, பாடசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதன்போது பாடசாலை சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அவசியமான வசதிகளை மேம்படுத்துவதுடன், பாடசாலை எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கல்வி மற்றும் சமூக வலுவூட்டல் ஊடாக மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தி, பிரதேசத்தின் நீண்டகால சமூக அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!