மொனராகலையில் கோர விபத்து: மின்கம்பத்தில் மோதி வாகனம் கவிழ்ந்ததில் மூவர் காயம்!
#SriLanka
#Police
#Accident
#Hospital
#LANKA4
#Injury
#MONARAGALA
Abi
9 hours ago
மொனராகலை – தம்பகல்லை – பொத்துவில் பிரதான வீதியின் ஒப்பேகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
வீதியை விட்டு விலகிய வாகனம் மின்கம்பத்தில் மோதிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்பகல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.