அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
#SriLanka
#government
#LANKA4
#work
#University
#lecturer
Abi
8 hours ago
விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, பௌதிக வளங்களின் குறைபாடு மற்றும் அதிகரித்த பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று காலை நுண்கலைப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் எதிர்ப்புப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பில் விசேட கருத்தரங்கொன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.