தாஷ்கண்ட் – மத்தளை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்: இலங்கைக்கு புதிய சர்வதேச இணைப்பு!

#SriLanka #Flight #Airport #LANKA4 #service #Uzbekistan
Abi
7 hours ago
தாஷ்கண்ட் – மத்தளை இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்: இலங்கைக்கு புதிய சர்வதேச இணைப்பு!

உஸ்பெகிஸ்தானின் Centrum Air விமான நிறுவனம், தாஷ்கண்ட் – மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. 

இதன் முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்த விமான சேவை 2027 மார்ச் மாத இறுதி வரை வாரத்திற்கு இரண்டு தடவைகள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த புதிய விமானப் பாதையின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், மத்திய ஆசிய நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான பயண மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் இந்த விமான சேவை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!